மாணவிக்கு அதிபரால் நேர்ந்த கதி



நிக்கவரெட்டிய, கபல்லாவ பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் இந்த மாணவியை காரில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில், சந்தேக நபரான பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டதாக நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர் நிக்கவரெட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை