இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 லட்சத்து 66 ஆயிரத்து 604 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 69 ஆயிரத்து 825 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 8,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 18,350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 2 லட்சத்து 9,181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் ஒருலட்சத்து 48,867 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் ஒருலட்சத்து 12,128 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை  குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை