ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!



ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்.


இந்நிலையில், நல்லை ஆதீனத்திற்குச் சென்ற ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றதுடன், நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அங்கு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது இந்தியா – இலங்கைக்கு இடையேயான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சிறுவன் தன்வந்தைச் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை