ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் ரெலோ உறுதி!ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில், கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை வெளியிட்டார்.


குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உப தலைவர் ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதியது பழையவை