ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!



பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை 40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை அதற்கான அவகாசம் உள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டார்.


இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை முதலில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை