நீரில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு!நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

6 மாணவர்கள் நேற்று (14-06-2024) கடலுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவரே உயிரிழந்துள்ளனர்.


பொலிஸார் விசாரணை

சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை