மின்சார வேலியில் சிக்கி இறந்த கொம்பன் யானைமஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொஹம்பகஸ்வெவ பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய நிலையில் கொம்பன் யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யானையின் உடல் நேற்று (29-06-2024) காலை தனியார் ஒருவரின் காணியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று யானை வேலியில் பொருத்தியமையின் காரணமாகவே இந்த கொம்பன் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனை 
இந்நிலையில், உயிரிழந்த கொம்பன் யானை சுமார் 8 அடி உயரமுடையது எனவும் 30 வயது மதிக்கத்தக்கது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று கொடுத்த வீட்டின் உரிமையாளரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதுடன் ஆனமடுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

மேலும், யானையின் உடலுக்கு நிக்கவெரெட்டிய மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை