சிறுவயது மகனை கொடூரமாக தாக்கிய அப்பா கைது!சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 4 வயது சிறுவன் தாக்கப்படும் காணொளி தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிஓயா, சம்பத்நுவர, கல்யாணபுர கிராமத்தில் அண்மையில் சிறு பிள்ளையின் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த இன்று (05-06-2024) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை  (05) அதிகாலை புல்மோட்டை  அரிசிமலை பகுதியில்  வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 45 வயதுடைய பிபிலே சமிந்த என்ற குகுல் சமிந்த என்பவரும் 37 மற்றும் 46 வயதுடைய  இரு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் வெலிஓயா கல்யாணபுரம்  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்  தாக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரின் பொறுப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
புதியது பழையவை