ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் மோடி!தனது பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளதுடன் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு விடம் அதற்கான கடிதத்தையும் கையளித்துள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையிலேயே இதனை கையளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் ராஜினாமா மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இதேவேளை புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை மோடி தனது பதவியில் நீடிக்குமாறு முர்மு கேட்டுக் கொண்டார்.

292 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதியேற்கும் வாய்பைப்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை