நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை -கல்வி அமைச்சு சற்றுமுன் அறிவிப்பு!




நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03-06-2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலைதொடர்வதால், நாளைய தினம் (03-06-2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து, மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடும் மழையுடனான வானிலையினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
புதியது பழையவை