தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பொதுசன நூலக நினைவேந்தல்யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43ஆவது ஆண்டினை நினைவுகூறும் முகமான நினைவேந்தல் நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்று மாலை (01-06-2024) யாழ். பொதுசன நூலக முன்றலில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்துகொண்டு நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியினை ஏற்றிவைத்துள்ளார்.


மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை செலுத்தியுள்ளனர்.
புதியது பழையவை