தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தீ வைப்பு!யாழில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டின் பொருட்கள் மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறித்தது.

குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்ட  ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீதே இவ்வாறு அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஊடக அடக்குமுறை


இந்த சம்பவத்தில் வீட்டின் சில பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
சில சமூக ஊடகங்கலில் வரும் போலிசெய்திகளை அடிப்படையாக வைத்து அதனை தவறாக புரிந்துக்கொண்ட சிலரால் தான் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவவதாகவும்,  இது ஒரு ஊடக அடக்குமுறை எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தரகோரி பொலிஸ் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதியது பழையவை