இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும்இன்று (28-06-2024)வெள்ளிக்கிழமை அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் (27-06-2024) முன்னெடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (28-06-2024) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (27-06-2024) குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை