புதிய இராஜாங்க அமைச்சர் பதவி ஏற்ற - ச.வியாழேந்திரன்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு
வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன், ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அதிபர் செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், இதற்கு முன்னர் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் பொறுப்புக்கு மேலதிகமாக அவருக்கு சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை