ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் - தமிழர் பகுதியில்கிளிநொச்சி தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்த பொலிஸார் கருச் சிதைவுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். அதேவேளை தனியார் நிறுவன வளாகத்தினால் அங்கு சென்று செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூற்ப்படுகின்றது.
புதியது பழையவை