மட்டக்களப்பு பொது நூலக தொடர்பில் ஆராய்வு!



தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் பிரதமர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றுள்ளது.


இக்கலந்துரையாடலில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கட்டிட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், மட்டக்களப்பு நகர சபையின் ஆணையாளர், நிர்மாண நிறுவனத்தின் உரிமையாளர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உதவி செயலாளர் மற்றும் அந்த அமைச்சின் அதிகாரிகளும் இதில் இணைந்திருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 345 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக தேவையான நடவடிக்கைகளை கண்டறிவது குறித்தும் இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை