இலங்கை வரும் ஜெய்சங்கர் தமிழ்க் கட்சிகளையும் சந்திப்பார்!இந்தியாவின் மீண்டும் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள  எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்கள்
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளுடனும் அவர் கலந்துரையாடல் நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


விஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை