பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவரது தந்தை திங்கட்கிழமை (22-07-2024) இரவு கைது செய்யப்பட்டதாக பசறைபொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான , பதுளை பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றும் 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு மூன்று நாட்களாக , பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்த போது , வெள்ளிக்கிழமை (19) அன்று தாய் வயல் வேலைக்கு சென்றிருந்த போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார் .
இது தொடர்பில் , தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான தந்தையை கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் , சந்தேக நபரை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .