கனடாவின்(Canada) வான்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது நேற்று(12-07-2024) காலை 8.09 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், முதலில் 6.6 ரிக்டர் அளவில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது 6.4 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகாத நிலையில் மேற்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்நிலநடுக்கதால் கட்டிடங்கள் அதிர்ந்ததையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.