ஆலயமொன்றில் நிகழ்ந்த அதிசய சம்பவம்! வியப்பில் பக்தர்கள்முல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் ஒன்றில் உள்ள அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்கள் வழமையாக மூடிய நிலையில் காணப்பட்டு வந்துள்ளது.


இதேவேளை, நேற்றையதினமும் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென அந்த சிலையிலுள்ள ஒரு கண் திறந்த நிலையிலும், மற்றைய கண் மூடிய நிலையிலும் மாறி மனித கண்களை ஒத்த நிலையில் காணப்படுகின்றது. 


இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை