சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமனம் - வெளியானது வர்த்தமானி



“இரா.சம்பந்தனின்” மறைவினால் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு மறைந்த இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக கதிரவேல் சண்முகம் குகதாசனின்” பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு 2391/14 இலக்க வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

16770 விருப்பு வாக்குகளை பெற்ற இவரின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.








இலங்கை அரசியலமைப்பின் 66(ஏ) சரத்தின் ஏற்பாட்டின்படி, 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயம் சம்பந்தன் காலமானதை அடுத்தே இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


“அவர் காலமானதை நான் ஆழ்ந்த வருத்தத்துடன் இந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கிறேன்.

நாடாளுமன்றத்தின் சார்பில், அவரது மறைவால் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன், உறுப்பினரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில், ஆர்.சம்பந்தனின் மறைவு குறித்து அனுதாப யோசனை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை அவரது பூதவுடல் 2024 ஜூலை 03 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் நாடாளுமன்றத்தின் பிரதான கதவுக்கு அருகில் உள்ள சம்பிரதாய மண்டபத்தில் வைக்கப்படும்


இதன்போது உறுப்பினர்கள் மாலை 4 மணிவரை உடலுக்கு அஞ்சலியை செலுத்தலாம் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதியது பழையவை