சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய - ஜனாதிபதி ரணில்
தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் புகலுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பு - பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.மேலும், இராஜவரோதயம் சம்பந்தனின் புகலுடலுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும் தமிழர் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.கொழும்பு - பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில்  இன்று (02-07-2024) காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை புதன்கிழமை (03-07-2024) நாடாளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அஞ்சலி

அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அஞ்சலி செலுத்தியுள்ளார்.செந்தில் தொண்டமான் அஞ்சலி 

இந்நிலையில், கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மேலும் சம்பந்தனின் பூதவுடலுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

புதியது பழையவை