யார் இந்ந பனாகொடை மகேஷ்வரன்.?



தம்பாபிள்ளை மகேஸ்வரன் தான் பனாகொட மகேஸ்வரன் .
அந் நாட்களில் பேசப்பட்ட தமிழிழ இராணுவம் ஸ்தாபக தலைவர் என அறியப்பட்டவர்.
நேற்று  யாழ்ப்பாணத்தில் காலமானார்.


1980 களில் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் ஆயுத போராட்டமாக ஆரம்பமான கால கட்டம்.
இராணுவத்திணரால் கைதாகி பனாகொட இராணுவ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.
தடுப்பு கம்பிகளை கச்சிதமாக வாளால் அரிந்து சுவிக்கம் மூலம் ஒட்டி வைத்து சந்தர்ப்பம் பார்த்து கம்பிகளை அகற்றி தப்பிய போதிலும் ஒரு சில நாட்களில் மாறு வேடத்தில் நடமாடிய வேளை கொழும்பிலே மீண்டும் கைதானார்.

1983 வெலிக்கடை சிறை கைதிகளில் படுகொலை சம்பவத்தில் இவர் உட்பட கைதிகள் தங்கியிருந்த கூண்டுக்குள் காடையர்கள் புக முற்பட்ட வேளை நுழைய விடாமல் போராடி தடுத்தார்.
வெலிக்கட தமிழ் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

சிறை உடைப்பு சம்பவத்தில் இவரும் தப்பினார்.
அவர்களில் பலரும் டக்ளஸ் தேவானந்தா உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு கர்ச்சிதமாக வெளியேறினர்.

தம்பாபிள்ளை மகேஸ்வரன் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சில நாட்கள்  தங்கியிருந்து சில இளைஞர்களை தன் வசப்படுத்தினார்.

சில நாட்களில் காத்தான்குடி மக்கள் வங்கி கொள்ளை நிகழ்ந்தது.
இதன் சூத்திரதாரியாக பொலிஸாரால் இவர் அடையாளம் காணப்பட்டார்.
இவருடன் தொடர்பை பேணிய ஓரு சிலர் கைதாகினர்.
பலர் தலைமறைவாகி விடுதலை புலிகள்,Plote,  தமிழ் ஈழ இராணுவம்  (TENA) என போராட்ட அமைப்புகளில் இணைந்தனர்.
இவர் இந்தியா சென்று தனது அமைப்பு பணிகளை மேற் கொண்டார்.

மீனாம்பக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரது அமைப்பும் செயலிழந்து போனது என்பது உண்மை.

புதியது பழையவை