நிந்தவூரிலிருந்து புத்தளத்துக்கு மரண வீட்டுக்குச்சென்ற வேன் இன்று (15-07-2024) நண்பகல் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி, கூளாவடியில் தடம்புரண்டதில் சிறு குழந்தையொன்று பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதில் 10 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதுடன், இஸ்தலத்துக்கு விரைந்த அகீல் எமேர்ஜென்ஸியின் பணிப்பாளர் எம்.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் மற்றும் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக உதவிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.