மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!





யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப பெண்ணொருவரை  அப்பெண்ணின் மருமகள் தாக்குவதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, விசாரணைகளை ஆரம்பித்த கொடிகாமம் பொலிஸார், தாக்குதல் நடத்திய மருமகளை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணைகளுக்குப் பின்னர் கைதான பெண் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை