அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்இலங்கை விமானம் ஒன்று வியாழக்கிழமை (04-07-2024) அவசர மருத்துவ காரணத்திற்காக இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கொழும்பு நோக்கி வந்த UL605 என்ற விமானம் இந்தோனேசியாவின் தெற்கே பயணித்தபோது விமானக் குழுவினர் பொது அவசரநிலையை அறிவித்தனர்.


விமானம் உள்ளூர் நேரப்படி 20:56 மணிக்கு ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. எனினும், விமானம் தரையிறக்கப்படமைக்கான காரணம் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை
புதியது பழையவை