உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் 8435 ஊழியர்களுக்கு இந்த மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையிலான ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நேர்முகத் தேர்வுபிரதமரும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை