திருகோணமலையில் நகரசபை ஊழியர்கள் போராட்டம்!திருகோணமலை நகரசபை ஊழியர்கள்  இன்று (02-07-2024)அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை – கோணேஸ்வரம் கோவிலை அண்டிய கடையொன்றில் கசிப்பு விற்பனை செய்யப்பட்ட நிலையில், குறித்த கடையை முத்திரையிட்டு மூடச் சென்ற திருகோணமலை நகரசபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தார்.


இந்தச் சம்பவத்தைக் கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த தொழில்ச்சங்கங்கள் இணைந்து மேற்கொண்ட குறித்த போராட்டத்தில் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பிலான  தீர்க்கமான முடிவு எட்டப்படாவிடின் பாரிய அளவில் தொழிச்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை