வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொருத்து வீட்டுத்திட்டம்
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த உபகரணங்களை கொண்ட பார ஊர்திகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார்.
மேலும், எட்டு பார ஊர்திகளில் குறித்த பொருட்கள் ஏற்றி வரப்பட்டுள்ளன. 

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 64 பொருத்து வீடுகள் இவ்வாறு வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
புதியது பழையவை