பலத்த பாதுகாப்பின் மத்தியில் வைத்தியசாலை வளாகத்திலிருத வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்  அர்ச்சுனா வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர். இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கு தெரிவித்து இன்றையதினம் சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம்   முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு தண்ணீர் கூட வழங்க விடாமல் அதிகாரிகள் தடுத்ததாகவும் அவரது உடல்நிலை சுகயீனமடைந்ததாகவும் தெரியவருகின்றது. 

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீண்டும் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், வீதி முடக்கல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை