ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்டுப்பணம் செலுத்துவதற்காக பத்தரமுல்லை சீலரத்தன தேரர் இன்று (26-07-2024) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.
எனினும் பணத்தை பத்தரமுல்லை விகாரையில் விட்டுவிட்டு வந்ததால் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வரும் திங்கட்கிழமை மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.