கட்டார் தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள மூன்று மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் இலங்கை மற்றும் நேபாளத்தை சேந்த பெண்கள் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த கட்டிடம் 3 மாடிகளை கொண்டது எனவும் அதன் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியதையடுத்து, அங்கு வசித்த பெண்கள் பலர் உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்துள்ளனர்.
உலங்கு வானூர்திகள்
இதனையடுத்து தீ பரவிய இடத்திற்கு வருகை தந்த தீயணைப்புப் படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், உலங்கு வானூர்திகளின் உதவியுடன் கட்டிடத்தில் இருந்த பலரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் கிட்டத்தட்ட 600 பெண்கள் தங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.