யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர் இன்று (16-07-2024) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுனெஸ்கோ நிறுவனம்
அத்தோடு, அவர் அதிகாலை 02.10 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸ் விமானமான KR - 662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்ரே அசுலேவுடன் மூன்று பேர் அடங்கிய குழுவினரும் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களை வரவேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.