தன்னை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடுமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பான கோரிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை