சம்பந்தனின் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார்….!2020, பொதுத்தேர்தல்
இலங்கைத்தமிழரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள். – 39,570

விருப்பு வாக்கு பட்டியல்..
1. ஆர். சம்பந்தன் விருப்பு வாக்கு - 21, 422
2. ச. குகதாசன் விருப்பு வாக்கு-16706
3. ஜீவகுமார் விருப்பு வாக்கு-13337
4. நித்தியானந்தம் விருப்பு வாக்கு-7310
5. சச்சிதானந்தம் விருப்பு வாக்கு-6141
6. சுலோசனா விருப்பு வாக்கு-5064
7. பிறேமகுமார்-விருப்பு வாக்கு-1590

திருகோணமலை மாவட்டத்தின் 2020, பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பில் 21422, விருப்பு வாக்குகளைப்பெற்று இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக 2020, ஆகஷ்ட்,10,ல் தெரிவாகினார்.

அவர் 30/06/2024, ல் இறைபதம் அடைந்துள்ளமையால் பட்டியலில் இரண்டாவது நிலையில் 16760, விருப்பு வாக்குகளை பெற்ற சண்முகம் குகதாசனின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிமித்து உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் வர்தமானியில் இந்த வாரம் பிரசுரிப்பார்..

வர்தமானி அறிவிப்பு வெளியிட்ட பின்னர் நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் (பெரும்பாலும் 09/07/2024,ல்) அவர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமானம் எடுக்கலாம்.

இதுதான் விகிதாசாரத்தேர்தலில் மக்கள் வாக்கெடுப்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கான நடைமுறை.
கட்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் இல்லை.

ஆனால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே அந்த கட்சியின் செயலாளருக்கு அந்த வெற்றிடத்திற்கு விரும்பியவரை நியமிக்ககும் அதிகாரம் உண்டு..!

புதியது பழையவை