மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சம்பந்தனுக்கு நினைவேந்தல்அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (06-07-20204) பி.ப 4.00 மணியளவில் களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது நினைவு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி , செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரைகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், பா.அரியநேந்திரன், ஞா.கிருஷ்ண பிள்ளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.புதியது பழையவை