கறுப்பு ஜூலை கலவரம்- நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள் - பிரித்தானிய எம்.பி உமா குமாரனின் பதிவு!




கறுப்பு ஜுலை தினத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து நீதிக்கான போராட்டத்தைத் தொடர்வோம். என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜுலை தினத்தை முன்னிட்டு தனது 'X' தளத்தில் இட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு ஜுலை
குறித்த பதிவில், உலகெங்கிலும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர்.கறுப்பு ஜூலையின் கொடூரங்களை என் பெற்றோர் என்னிடம் சொன்னார்கள் - அந்த அதிர்ச்சி தலைமுறைகள் கடந்து வந்தாலும் மறக்கப்படாது.


இன்று, உயிர் இழந்தவர்களை நினைவு கூர்ந்து நீதிக்கான போராட்டத்தைத் தொடர்கிறோம். என பதிவிட்டுள்ளார்.


இதேவேளை,கறுப்பு ஜுலை தின நினைவேந்தல்கள் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு பிரித்தானிய நாடாளுமன்றம் முன்னாள் இது தொடர்பான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை