மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பாதையாத்திரை செல்லும் அடியார்களுக்காக போரதீவுப்பற்று திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாகசாந்தி நிகழ்வான சிறப்பான முறையில் இடம் பெறுகின்றனர்.
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இன்று(21-07-2024) இறுதிநாள் உற்சவமாகும் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் இருந்து அதிகலவான அடியார்கள் பாதையாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக கருதப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவமானது(01-07-2024) ஆம் திகதி ஆரம்பமாகி 21நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று நாளை (22-07-2024)ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.