மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பனை அபிவிருத்தி அதிகாரசபை உங்களின் கவனத்திற்கு!சாதாரண மனிதன் ஒரு பனைமரம் தேவைக்கு வெட்டுவதென்றால் எத்தனை பேரிடம் அனுமதி பெற வேண்டும் அலைந்து திரிந்து பல நாள் செல்லும்.

ஆனால் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணல்பிட்டி சந்தியில் இருந்து வால்கட்டிற்கு செல்லும் பாதை (கம்பிறோட்) கொங்றீற் இடுவதற்காக பாதை மறிப்பிற்கு அருகில் உள்ள பனைமர கன்றுகளை இப்படி வெட்டி வீதியில் போடுவது சரியா?

இதே போன்று அனைவரும் செய்ய முடியுமா? எமது பிரதேசத்தில் இனி எல்லோருக்கும் இப்படி செய்யலாமா? அல்லது சாதாரண பொது மக்களுக்கு மட்டுமா சட்டம் செல்லுபடியாகும்?

ஒரு பாதை மறிப்பிற்கு 4 பனை மரங்கள்.... எங்காவது இப்படி நடந்திருக்கிறதா? பார்க்கும் போது மன வேதனையாக இருக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு...
புதியது பழையவை