பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி போராட்டம்!நாட்டிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி ஏற்றி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் மீது பொலிஸாரின் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதலுக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும், பெற்றோர்களை சுமையாக ஏற்றி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல், அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.


அத்துடன், நாளை நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பாடசாலையின் முன்பாகவும் பிற்பகல் 2.00 மணிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை