தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!



இலங்கை  சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும்  தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய் எண்ணெய் கையிருப்பு 
இலங்கைக்கு எண்ணெய் தாங்கிகளின் வருகை தாமதமாவதால் இந்த நிலை குறுகிய காலத்திற்கு ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தேங்காய் எண்ணெய் கையிருப்பு மறைத்தல், விலை உயர்வு மற்றும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் தரம் ஆகியவற்றை சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
புதியது பழையவை