யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் தனது மருமகளினால் தாக்கப்படும் பெண் ஒருவரின் காணொளி பலரதும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் காணொளியில், மரக்குச்சி ஒன்றின் மூலம் குறித்த பெண் சரமாரியாக தாக்கப்படுகின்றார்.
எனினும், இது குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
இந்நிலையில், இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூகத்தில் தாய்மார்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற போதிலும் இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதுடன் கண்டனத்துக்குரியனவாகவும் உள்ளன.