இலங்கை ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு!



ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பிற்காக நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை