தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாதக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது
அரச அதிகாரங்களை துஷ்பிரேயோகம் செய்தமை தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.