பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவன் நீதிமன்றம் இன்று (07-08-2024)உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக பல பெண்களது வாழ்க்கையை சீரழித்தும், தனது தலைவருக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்ப்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் என பலருக்கு தலைவரின் உத்தரவின் பெயரில் போலிமுகநூல் ஊடாகவும் தனது முகநூல் ஊடகம பல தரப்பட்டவர்களையும் முகம் சுழிக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டு அச்சுறுத்திய நபர் இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் அவர்கள் நேற்றைய தினம் (06-08-2024)பாராளுமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியதையடுத்து இன்று சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.