அனுராதபுரம் - திரப்பனை கல்லூரி ஒன்றின் மாணவர்கள் 21 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் அரிப்பு காரணமாக இன்று (15-08-2024) மரதன்கடவல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மரதன்கடவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு திடீரென அரிப்பு ஏற்பட்டதால், 1990 எண்ணுக்கு அழைத்து நோயாளர் காவு வண்டி மூலம் மரதன்கடவல வைத்தியசாலையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
உணவு விஷமாகி ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் அல்லது கம்பளிப்பூச்சி கடித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.