வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியனின் 221 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நகர சபை மற்றும் பண்டார வன்னியன் விழா குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலத்துக்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.