48 பேருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு!



சர்வதேச பொலிஸாரின் உதவியுடன்  இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட 48 பேருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களில் 28 பேர் டுபாயிலும், 11 பேர் இந்தியாவிலும், மற்ற மூவர் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.


தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்குழுக்கள்

கொஸ்கொட சுஜீ, அல்டோ தர்மா, களு சாகர, படோவிட்ட அசங்க, லொகு பட்டி, மிதிகம சுட்டி, கெஹெல்பத்தர பத்மே, உரகஹா மைக்கேல், ஜிலே, ஹந்தயா, சாரியா, கிஹான் பொன்சேகா, ஷான் அரோஷ், சுடு மல், லுனாவே அசிதா, திப்பிட்டிகொட சக்தி, வல்லே சாரங்கா, ரன்மல்லி, திப்பிட்டிகொட லஹிரு, மலுவகே சன், நிபுனா, டிஸ்கோ, குடு லலித், சாம சமித், பினோய் தில்ஷான், சம்பிகா பிரசன்னா, சுது மென்யா மற்றும் லதா போன்றோர் டுபாயில் தலைமறைவாகியுள்ள நிலையில், சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.


கிம்புலாலால குணா, புகாடி கண்ணா, லடியா, பம்மா, கெசல்வத்தே தனுக, பொடி சுரேஷ், மொஹமட் ரஃபைதீன், கெசல்வத்தே தனேஷ், கோட்டா காமினி, நளின் பூஜித மற்றும் பிரதீப் குமார் ஆகிய 11 பாதாள உலகக் குழுக்கள் இந்தியாவில் தலைமறைவாகியுள்ள நிலையில், சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொஸ்கொட நந்துன், இங்கிலாந்தில் குடு லால், பிரான்சில் குடு அஞ்சு ஆகிய மூவருக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டவர்களில் கனேமுல்ல சஞ்சீவ, ஹரக் கட்டா, மிதிகம ருவன், குடு சலிந்த, மன்னா ரமேஷ் மற்றும் பாபி ஆகிய 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை