கிம்புலாவல, தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கரடி தாக்கியதில் இன்று (06-08-2024) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தியபெதும பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு காரணமாக, வனவிலங்கு அதிகாரிகள் கரடியை கருணைக்கொலை செய்ய முடிவு செய்து இன்று கரடியை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.