ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகள் மாற்றப்பட்டுள்ளமை தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுற்றுலாத்துறை, காணி அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மனுஷ நாணயக்காரவின் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொட
மனுஷ நாணயக்காரவின் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொட
பதவிகளுக்கான வெற்றிடங்கள்
முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தனர்.
இருப்பினும், தற்போது அவர்கள் பதவிகளை இழந்துள்ளமையினால் குறித்த அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த அமைச்சுப் பதவிகளுக்கான வெற்றிடங்களை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து நிரப்பும் நோக்கில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.